மாணவர்களை விடுதலை செய்யும்வரை போராட்டம் கைவிடப்படாது

தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக  மாணவர்களை விடுதலை செய்யும் வரையில் பகிஸ்கரிப்பு போராட்டத்தை கைவிடுவதென்ற பேச்சிற்கே இடமில்லையென பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று தெளிவுபட அறிவித்து விட்டது. பல்கலைக்கழக துணைவேந்தரது அழைப்பின் பேரில் மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தனர். அவ்வேளையில் பல்கலைக்கழகத்தில் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக பேசப்பட்ட வேளையிலேயே  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் விடுவிக்கும் வரையில்  போராட்டத்தை விலக்கி கொள்வதென்ற பேச்சிற்கே இடமில்லையென மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதனிடையே எதிர்வரும் வெள்ளிக்கிழமை பலாலியில் மாநாடொன்றை நடத்த யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி கத்துருசிங்க விடுத்த அழைப்பினை  பல்கலைக்கழக பீடாதிபதிகள் முற்றாக நிராகரித்துவிட்டனர். பலாலிக்கு சென்று பேச்சு நடத்த வேண்டிய தேவை தமக்கில்லையென தெரிவித்துள்ள அவர்கள் மீண்டும் குடாநாட்டில் இராணுவ ஆட்சியொன்றை முழுமையாக கொண்டுவர அது வழிகோலிவிடுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். முன்னதாக விஞ்ஞான பீடாதிபதியும் தொடர்ந்து கலைப்பீடாதிபதியும் அதே நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டுள்ளதுடன் இன்று மருத்துவ பீடாதிபதியும் அத்தகைய தீர்மானத்தையெடுத்து துணைவேந்தருக்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

பலாலியில் படைத்தலைமையினை சந்திப்பதெல்லாம் எமது கடைமையல்லவென தெரிவித்துள்ள பீடாதிபதிகள் அப்பணியினை தேவையாயின் பேரவை கையாளட்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதே வேளை ஏனைய பீடாதிபதிகளும் அதே முடிவையே எடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக கொழும்பில் பாதுகாப்பமைச்சின் செயலாளருடனான அண்மைய சந்திப்பின் போது அவர்கள் அவமதிக்கப்பட்டமை அவர்களை இவ்வாறு சீற்றங்கொள்ள வைத்திருக்கலாமென சில தரப்புகளுகங்களை வெளியிட்டுள்ளன.

மாணவர்கள் மற்றும் விரிவுரயாளர்களால் முன்னெடுக்கப்படும் பகிஸ்கரிப்பு போராட்டம் தொடர்வதால் பல்கலைக்கழக சூழல் தொடர்ந்தும் மயான அமைதியையே பேணி வருகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply