பிரதம நீதியரசரின் மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனை

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு எதிராக பிரதம நீதியரசர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனை செய்யப்பட உள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரும், நீதவானுமான எஸ்.சிறிஸ்கந்தராஜா தலைமையிலான மூவர் அடங்கிய நீதவான் குழாம் இந்த மனுவை பரிசீலனை செய்ய உள்ளது.

நீதவான் சுனில் குணரட்ன மற்றும் ஏ.டபிள்யூ.ஏ. சலாம் ஆகியோர் இந்த நீதவான் குழாமின் ஏனைய உறுப்பினர்களாகும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கையை தள்ளுபடி செய்யுமாறு பிரதம நீதியரசர் தனது மனுவில் கோரியுள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் நீதியான முறையில் நடத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதனை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க கோரியுள்ளார். சபாநாயகர், பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள், பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் நாயகம் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply