குற்றப்பிரேரணைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி புதிய குற்றச்சாட்டு

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி புதிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இந்த பிரேரணையில் கைச்சாத்திட்டவர்களே விசாரணை நடத்துபவர்களாகவும் உள்ளனர். இதற்கு அப்பாலும் முரண்பாடுகள் உண்டு என ஐ.தே.க கூறியது.  குற்றப்பிரேரணையை விசாரிப்பவர்களுக்கு குற்றப்பிரேரணை செயன்முறையுடன் வேறு வகையில் தொடர்புள்ளவர்களுக்கும் இடையில் குடும்ப உறவுகள் காணப்படுகின்றன. இது இன்னொரு முரண்பாடு ஆகும் என ஐ.தே.க எம்.பி சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் கணவரான தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை தொடக்கப்பட்ட முறைபற்றி கேட்டபோதே சேனசிங்க எம்.பி மேற்கண்டவாறு கூறினார்.

‘கொடுக்கல் – வாங்கல் நடைபெறாத ஒரு விடயத்தில் விசாரணை தொடங்கப்பட்டது எவ்வா? நான் கிரேக்க முறிகள் விடயத்திலும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பிலும் பல முறைப்பாடுகளை செய்தேன். ஆனால், இவை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என அவர் கூறினார்.

மேலும், ‘த பினான்ஸ் கம்பனியில் முதலீடு செய்யும் தீர்மானம் சேமிப்பு வங்கியின் சபையினாலேயே மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறாயின், ஏன் ஏனைய சபை அங்கத்தவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை’ என அவர் குறிப்பிட்டார்.

‘விமல் வீரவன்ச போன்றவர்கள், நீதித்துறையில் அதி உயர் அங்கத்தவரை விசாரித்தனர். இவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவரோ எதிரணி உறுப்பினர்களோ இல்லாத நிலையிலும் விசாரணையை முடித்துவிட்டனர்’ என சேனசிங்க எம்.பி கூறினார்.

‘அரசாங்கம் தனது செயல் மூலம் குற்றம் நிரூபிக்கப்படாதவரையிலும் நிரபராதி எனும் எடுகோளை தலைகீழாக்கிவிட்டது. நிரபராதி என நிரூபிக்கப்படாதவரை குற்றவாளி என்பதே இங்கு காணப்பட்ட எடுகோள்.

நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழு அறிக்கை தயாரிக்க முன்னர் அக்குழுவின் தலைவர் அந்த அறிக்கை பற்றி பகிரங்கமாக பேசிவிட்டார். கடாபி, முகாபே, அடி அமீன் மற்றும் முபாரக் போன்றோரின் பங்காரு நீதிமன்றத்தை இரு நினைவூட்டுகின்றது’ என அவர் மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply