சீரற்ற காலநிலை காரணமாக 23 பேர் பலி: 36 பேர் காயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 15 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 68 ஆயிரத்து 904 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 66 ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 5 ஆயிரத்து 231 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 753 பேர் 102 தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 358 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 907 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply