காலநிலை சீற்றத்தால் 25 பேர் பலி 267525 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 25 பேர் பலியாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களினால் 36 பேர் படுகாயம் அடைந்துள்ளதோடு 13 பேர் காணாமற் போயுள்ளனர். மண்சரிவு, சுழல் காற்று மரம் முறிவு என்பவற்றால் 358 வீடுகள் முழுமையாகவும் 1935 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மழை, வெள்ளம் காரணமாக நாடு முழுவதிலும் 69133 குடும்பங்களைச் சேர்ந்த 267525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 5281 குடும்பங்களைச் சேர்ந்த 18845 பேர் 102 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply