யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய விடுதி – உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை

654.4 மில்லியன் ரூபா செலவில் யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்காக புதிதாக விடுதிகளை அமைக்க உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 400 கட்டில்களை கொண்டு அமைக்கப்படவுள்ள உத்தேச விடுதியின் நிர்மாண வேலைகள் 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வருட காலத்துக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகம் தற்போது 6000 மாணவ, மாணவிகளுக்கு பட்டதாரிகள் மற்றும் பட்டப்பின்படிப்பு பாடத்திட்டங்களை வழங்கி வருகிறது. அவற்றுள் 1300 வெளியிட மாணவர்களும் உள்ளடங்குவர்.

உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க புதிய விடுதி திட்டத்தை முன்மொழிந்ததுடன் அமைச்சரவையும் இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply