சுயவிருப்பின் அடிப்படையிலேயே யாழ். பல்கலை மாணவர்களுக்கு புனர்வாழ்வு
சுய விருப்பின் அடிப்படையிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுவதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஏனைய தரப்பினர் குற்றம் சுமத்துவதனைப் போன்று மாணவர்கள் பலவந்தமான முறையில் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
சுய விருப்பின் அடிப்படையில் குறித்த மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றச்சட்டின் பேரிலேயே குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply