தமிழக முதல்வர் பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து

, முக்கியப் பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் சார்பில் வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,தமிழக ஆளுநர் கே. ரோசைய்யா, முதல்வருக்கு வாழ்த்துக் கடிதம் மற்றும் பூங்கொத்து அனுப்பியதோடு தொலைபேசி மூலமும் தனது பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர்  தா. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர்  டி. ராஜா, எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர்  ஜி. ராமகிருஷ்ணன், துக்ளக் ஆசிரியர்  சோ. ராமசுவாமி ஆகியோர் தொலைபேசி மூலம் தங்களது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான  செ.கு,. தமிழரசன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான  பி.வி. கதிரவன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான  ஆர். சரத்குமார், ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்  பெ. ஜான் பாண்டியன், தமிழ் மாநில முஸ்லீம் லீக்கின் தலைவர் ஷேக் தாவூத், தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர்  பஷீர் அகமது, இந்தியன் யூனியன் காயிதேமில்லத் லீக்கின் தலைவர்  எம்.ஜி. தாவூத் மியாகான், தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் கட்சியின் தலைவர்  திண்டிவனம் க. ராமமூர்த்தி, திரைப்பட இயக்குநர்  கே. பாலச்சந்தர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் கலைமாமணி பி.எஸ். சச்சு, மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர்  பாலாஜி அவர்களுடைய மகன்  சுரேஷ் பாலாஜி, தொழிலதிபர்கள்  எம்.ஏ.எம். ராமசாமி, பொள்ளாச்சி நா. மகாலிங்கம், திரைப்பட நடிகை திருமதி சரோஜாதேவி ஆகியோர் பூங்கொத்து மற்றும் கடிதம் மூலம் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தோழமை கட்சித் தலைவர்கள், பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், திரைப்படத் துறையினர், தொழிலதிபர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள்,  சட்டமன்றப் பேரவைத் தலைவர்,  அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், கலைத் துறை அன்பர்கள்,  அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட ஏராளமானோர்  முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply