எஃப் 35 ரக போர் விமானங்கள் இயக்கத்தை நிறுத்தியது அமெரிக்க ராணுவம்
அமெரிக்க ராணுவம், என்ஜின் பிரச்னை காரணமாக எஃப் 35 ரக போர் விமானங்கள் முழுவதையும் சேவையில் ஈடுபடுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது.இதுகுறித்து ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது கலிபோர்னியா மாகாணம் எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் பயன்பாட்டில் உள்ள எஃப் 35 ரக போர் விமானங்களில் வழக்கமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, ஒரு விமானத்தின் என்ஜின் பிளேடில் உடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவ்வகையைச் சேர்ந்த அனைத்து விமானங்களின் இயக்கமும் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வகை விமானங்களின் என்ஜின்கள் மற்றும் அதுதொடர்பான உதிரி பாகங்களை ஆய்வுக்காக கனெக்டிகட் மாகாணம் மிடில்டவுனில் உள்ள பிராட் அன்ட் விட்னி நிறுவனத்தின் என்ஜின் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விமானம் வாங்குவதை தாமதப்படுத்தும் செலவுக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், என்ஜின் பழுது ஏற்பட்டிருப்பது ராணுவத்துக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஒருவர் பயணம் செய்யக்கூடிய, ஒரு என்ஜின் கொண்ட இந்த விமானம் 5ஆம் தலைமுறை போர் விமானம் ஆகும். தரையிலிருந்து தாக்குதல் நடத்தவும், வேவு பார்க்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply