கடைசி பிரார்த்தனை கூட்டத்தில் போப் பெனடிக்ட் உருக்கம்
போப் 16-வது பெனடிக்ட், வாடிகன் சிட்டியில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.போப் பதவியில் அவர் பங்கேற்கும் கடைசி ஞாயிறு பிரார்த்தனை என்பதால் சுமார் 1 லட்சம் பேர் வரை திரண்டிருந்தனர். அவரைப் புகழ்ந்தும், ஆதரவு தெரிவித்தும், வழியனுப்பும் விதமாகவும் வாசகங்கள் அடங்கிய அட்டையுடன் மக்கள் பங்கேற்றனர்.அப்போது அவர்கள் மத்தியில் போப் மிகவும் உருக்கமாகப் பேசினார். “ஓய்வு பெறுமாறு கடவுள் இட்ட கட்டளையை ஏற்று செயல்பட்டுள்ளேன். இனிமேல் தொடர்ந்து அதிகமாக பிரார்த்தனை செய்வதிலும், தியானம் செய்வதிலும் எனது நேரத்தை செலவிடப் போகிறேன். நான் இந்த தேவாலயத்தை கைவிட்டுச் செல்லவில்லை. நாம் எப்போதுமே நெருக்கமாக இருப்போம்.என் மீது அன்பு செலுத்தி மிக அதிகமானவர்கள் இங்கு வந்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி’ என்று போப் பேசினார்.
85 வயதாகும் போப் 16-வது பெனடிக்ட், பிப்ரவரி மாதத்துடன் போப் பதவியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக கடந்த 11-ம் தேதி அறிவித்தார். அன்றாடப் பணிகளை மேற்கொள்ள தனது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று அவர் காரணம் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply