இலங்கையில் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் : ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை

இலங்கையில் பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெற்ற வண்ணமேயுள்ளன. பல்வேறு உள்நாட்டு யுத்தங்களிலும் போர்க் குற்றங்கள் தொடர் கதையாகவே மாறியுள்ளன. இத்தகைய குற்றச் செயல்களையும் மனித உரிமை மீறல்களையும் புரிந்து வருவோருக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை முறைமையை நாம் தொடர்ந்தும் போஷிக்கவும் பலப்படுத்தவும் வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனீவாவில் ஆரம்பமானது. அதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே நவநீதம்பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டார்.

ருவாண்டா, பொஸ்னியா, மற்றும் ஹேர்ஸிகோவினா ஆகிய நாடுகளில் நிகழ்ந்துள்ள இன அழிப்பு நடவடிக்கைகளின் போது இலட்சக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளனர். என்று சுட்டிக்காட்டிய நவநீதம்பிள்ளை ஈராக்கிலும் இலங்கையிலும் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன என்றும் எடுத்துக் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply