ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம்: ஒருவர் கைது

அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா மற்றும் 3 அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு விஷம் தடவிய கடிதங்களை அனுப்பியதாக மிசிசிப்பி மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரைப் எப்.பி.ஐ (FBI) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன், பாஸ்டன் நகரில் நடைபெற்ற மராத்தான் போட்டியின் போது நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். 176 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், ஏப்ரல் 10ம் தேதி, ஒபாமாவு, அமெரிக்கா செனட் உறுப்பினர் ராஜர் விக்கர் மற்றும் மாகாண நீதிபதி ஒருவருக்கு ரிசின் என்ற விஷப்பொருள் தடவிய கடிதம் ஒன்று வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கடிதங்களில், ஒரு தவறு நடக்கும் போது அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அதற்கு துணை போவதற்குச் சமம் என்று எழுதியிருந்ததாகவும் தெரிகிறது.

இதையடுத்து, நேற்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் மிசிசிப்பி மாகாணத்தைச் சேர்ந்த பால் கெவின் கர்டிஸ் என்ற நபரைப் போலீசார் கைது செய்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply