பாண் விலை அதிகரிக்கும் சாத்தியம்

மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவிக்கின்றது. மின்கட்டண அதிகரிப்பானது மொத்த துறையையும் பாதித்துள்ளதாக அச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.கேஸ் விலை, டீசல் விலை வரிசையில் தற்போது மின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அச் சங்கம் தெரிவிக்கின்றது. இந்நடவடிக்கையானது தமது இலாபத்தை பாதிக்குமென அச்சங்கம் குறிப்பிடுகின்றது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply