மின்சாரக் கட்டண உயர்வால் மக்களுக்கு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவு : அசாத் சாலி
மின்சாரக் கட்டண உயர்வால் மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவினை எதிர்நோக்கியுள்ளர் என முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.
கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நம் நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு நாளைக்கு தனியொரு மனிதனின் வாழ்க்கைச் செலவுக்கு 1300 ரூபா முதல் 1500 ரூபா வரை தேவைப்படுகின்றது. இந்த நிலைமையை அரசு மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் மின்சாரக் கட்டண உயர்வால் சாதாரண மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளனர்.
அரசாங்கம் திருடர்களை பாதுகாக்கின்ற அதேவேளை, நல்லவர்களையும் திருடர்களாக மாற்றுகின்றது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளர்களுக்கு மருத்துவ வசதிகள் இல்லை.
இந்நிலையில், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமானால் ஊழியர்களுக்கும் வருமானத்தில் 3000 ரூபாவை அதிகரிக்க வேண்டும். அதைவிட அரசாங்கம் பொதுபல சேனாவின் கையில் தான் தங்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply