முன்னாள் ராணுவ தளபதியும் பாக்., முன்னாள் அதிபருமான முஷாரப் கைது
இஸ்லாமாபாத்: நான்கு ஆண்டுகளுக்கு மேலாக துபை மற்றும் லண்டனில் தங்கி இருந்த முன்னாள் ராணுவ தளபதியும் பாக்., முன்னாள் அதிபருமான முஷாரப் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் வந்தார். இவர் மீது தேச துரோகம் செய்தது, நீதிபதிகளை கைது செய்தது, மற்றும் கொலை குற்றம் உள்ளிட்ட வழக்குகளில் ஜாமின் நிராகரிக்கப்பட்டதும் இன்று (வெள்ளிக்கிழமை) இவர் கைது செய்யப்பட்டார்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தான் புறப்படும் முன்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்; நான் தாய்நாடு சென்றால் என்னை கொலை செய்யவும், கைது செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனையெல்லாம் கண்டு நான் அஞ்சப்போவதில்லை. செல்வேன் என்றார் உறுதியாக. மே மாதம் நடக்கவிருக்கும் பார்லி., தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ததில் இவரது 4 மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
சோகமாக முஷாரப்:
இந்நிலையில் இவர் மீதான கிரிமினல் வழக்குகள் விரைவு படுத்தப்பட்டன. நேற்று ஐகோர்ட் ஜாமினை ரத்து செய்தது. உடனே கைது செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கைது செய்யப்பட்டு விடுவோம் என கோர்ட்டில் இருந்து தனது பாதுகாவலர்களுடன் பண்ணை வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இதனையடுத்து போலீசார் இவரது வீட்டை சுற்றி வளைத்தனர், இன்று காலையில் அவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். போலீசாருடன் செல்லும் போது மிகவும் , சோகமாகவும், அமைதியாகவும் காணப்பட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply