“மாஜி’ அதிபர் முஷாரப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை, 14 நாள், நீதிமன்ற காவலில் வைக்க, இஸ்லாமாபாத் கோர்ட், நேற்று உத்தரவிட்டது.பாகிஸ்தான் அதிபராக இருந்த, பர்வேஷ் முஷராப், 69, தன் ஆட்சி காலத்தில், நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அப்போது, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உட்பட, 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து, அவர்களை சிறை வைத்தார்.இந்த வழக்கு, நிலுவையில் இருந்தது.பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, கடந்த, நான்கு ஆண்டுகளாக, வெளிநாடுகளில், தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த முஷாரப், சமீபத்தில் நாடு திரும்பினார். இந்த நிலையில், நீதிபதிகளை சிறைவைத்த வழக்கில், அவரை கைது செய்ய, இஸ்லாமாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட முஷாரப், வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்று அவர், இஸ்லாமாபாத்தில் உள்ள, பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, அவரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி, கோர்ட் உத்தரவிட்டது.ஆனாலும், அவரை சிறையில் அடைக்காமல், இஸ்லாமாபாத்தில் உள்ள, அவரது பண்ணை வீட்டிலேயே, வீட்டு சிறையில் வைத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply