சீரற்ற காலநிலையால் அபாயம்:1139 பேர் தற்காலிக முகாம்களில்

நாட்டின் பல பாகங்களிலும் நிலவும் சீரற்ற காலநிலையால் 319 குடும்பங்களைச் சேர்ந்த 1139 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் வெள்ளம்இ மண்சரிவுஇ மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இதுவரை ஐவர் பலியாகியுள்ளதாகவும் மூவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் கடமைநேர அதிகாரி சரத் லால்குமார தெரிவித்தார்.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு குருநாகல்இ கேகாலைஇ பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.
இதேவேளைஇ இன்றும் நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply