இலங்கையின் இறுதியுத்த ஆவணப்படம் இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில்ü

யுத்த சூனியப் பிரதேசம் என்ற தலைப்பில் சனல் – 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தம் சம்பந்தமான ஆவணப்படத்தினை இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திரையிடவும் இது குறித்து விவாதமொன்றை மேற் கொள்ளவும் நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்குகளை மனித உரிமை கண்காணிப்பகம், சர்வசேத மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச நெருக்கடி குழு ஆகிய அமைப்புகள் மேற்கொண்டுள்ளன.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இவ் ஆவணத் திரைப்படம் திரையிட்டதன் பின்னர் இடம்பெறவுள்ள குழு விவாதத்தில் ஐரோப்பிய நிறுவனங்களின் அலுவலக பணிப்பாளர் நிக்கொலஸ் பெகர், சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கைக்கான திட்டப்பணிப்பாளர் அலன் கீனன், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐரோப்பிய ஒன்றியத்தின் பணிப்பாளர் லோட் லீச்ட் உள்ளிட்டோர் விசேட உரைநிகழ்த்தவுள்ளனர்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply