இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 103 செய்மதி கருவிகள் மீட்பு
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 103 செய்மதி தொடர்பாடல் கருவிகளை சுங்கப் பிரிவினர் மீட்டுள்ளனர்.சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்த இந்திய பிரஜைகள் இருவரிடம் இருந்து இந்த கருவிகள் மீட்கப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
அத்துடன் குறித்த நபர்களிடம் இருந்து 64 கிலோ பெரிய வெங்காய விதைகளும் மீட்கப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இதேவேளை, போலி ஆவணங்களை சமர்பித்து ஜப்பானில் இருந்து நான்கு வாகனங்களை இறக்குமதி செய்த வியாபாரியும் அவருக்கு உதவியவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வாகனங்களின் பெறுமதி 1 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகம் என சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply