தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணசபைத் தேர்தல்களை புறக்கணிக்கக் கூடும் மனோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி வட மாகாணசபைத் தேர்தல்களை புறக்கணிக்கக் கூடுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவரும் பங்கேற்றிருக்கவில்லை.வட மாகாணசபைத் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தால் பெண் இல்லாத திருமண வீடாகவே மாகாணசபைத் தேர்தல் அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply