இறுதிக் கட்ட யுத்தத்தின் போது யார் எறிகணைத் தாக்குதலை நடத்தினார்கள் என்பது தெரியாது : நாமல் ராஜபக்ஷ
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது யார் எறிகணைத் தாக்குதலை நடத்தினார்கள் என்பது தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து சர்வதேச ஊடகமொன்று கேள்வி எழுப்பியிருந்தது.இந்த கேள்விகளுக்கு பதிலளித்த போது நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கப் படையினரா அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளே குண்டுத் தாக்குதல் நடத்தினார்கள் என்பது சரியாகத் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தெற்கில் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பாடசாலைகள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மக்கள் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மக்களும் யுத்தம் காரணமாக துயரங்களை அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளார். சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டதனை இந்த நாட்டில் எவரும் அனுமதிக்கவில்லை எனவும், சம்பவம் தொடர்பில்ழ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடத்தல்கள் மற்றும் காணாமல்போதல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply