ஐநா விசேட பிரதிநிதி இலங்கை வர விரும்புகிறார்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம் வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான விசேட பிரதிநிதியாக கிறிஸ்டோப் ஹென்ஸ் செயற்படுகிறார். இலங்கைக்க விஜயம் செய்ய விரும்புவதாக தாம் ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார். ஆனால் இலங்கை அரசாங்கம் தனது கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என அவர் கூறியுள்ளார். சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கை தொடர்பான யுத்த காணொளி உண்மையானது என 2011ம் ஆண்டில் கிறிஸ்டோப் ஹென்ஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply