இந்தியாவுக்கு அமெரிக்காவின் இயற்கை எரிவாயு
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இயற்கை எரிவாயுவை ஏற்றமதி செய்ய அந்நாட்டு அரசு விதிமுறைகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயுவை, அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகளுக்கு மட்டுமே ஏற்றமதி செய்ய முடியும்.
இந்தியா இது போன்ற ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்து கொள்ள வில்லை. எனினும், இந்தியாவுக்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்ய அமெரிக்காவின் எரிசக்தித்துறை விதிமுறைகளுடன் கூடிய சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
இதனால் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள குயின்டானா தீவில் உள்ள ஏற்றுமதி முனையத்திலிருந்து திரவ இயற்கை எரிவாயு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்தியாவின் எரிசக்தி தேவையின் ஒரு பகுதியை இதன் மூலம் பூர்த்தி செய்ய முடியும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply