ஷிராணிடமிருந்து வாக்கு மூலம் பெறும் நடவடிக்கை நிறைவு
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்காவிடமிருந்து வாக்கு மூலம் பெறும் நடவடிக்கைகளை இலஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நேற்று (20) பூர்த்தி செய்தது. ஐந்து மணித்தியாலம் ஆணைக்குழு அதிகாரிகள் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்டனர். சட்டபூர்வமான வழியில் உழைக்க இயலாத சொத்துக்களை சம்பாதித்தமை தொடர்பாக இவரிடமிருந்து வாக்கு மூலம் பெறப்பட்டது.
இந்த வாக்கு மூலத்தை ஆணைக்குழு அதிகாரிகள் ஆராய்ந்து அதன் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்துவர்.
இக் காரணங்களை உறுதிப்படுத்துவ தற்காக தேவைப்படும் சாட்சியாளர்களிடம் இருந்து வாக்கு மூலம் பெற ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவரின் வாக்கு மூலத்திலிருந்து ஏதாவது சிக்கல்கள் எழுந்தால் அதனைத் தெளிவுபடுத்துவதற்காக தேவைப்பட்டால் ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அழைக்கப்படுவார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply