இந்தியா- அமெரிக்கா தீவிரவாதத்தை ஒடுக்குவதில் ஒத்த கருத்து கொண்டுள்ளன: காண்டலீசா ரைஸ்

புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் காண்டலீசா ரைஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையில், ஜனநாயக நாட்டில் சிறுபான்மையினர் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை தான் வரவேற்பதாக கூறினார்.மேலும், பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தீவிரவாதத்தை எவ்வித வடிவத்திலும் அனுமதிக்க இயலாது என்றும் ரைஸ் கூறியுள்ளார். தீவிரவாதத்தை வேரறுப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரே கருத்தை கெண்டுள்ளதாவும் அவர் கூறியுள்ளார்.

உலக நிதித்துறை தோல்லி அடைந்ததை தான் ஒத்துக்கொள்வதாகவும், இந்தோனேசியாவில் நடைபெறும் உலக வர்த்தக மாநாட்டில் இதுகுறித்து தெளிவான முடிவு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply