ம.பி,ராஜஸ்தான்,டில்லி தேர்தல்களில் பாஜக முன்னிலை

இந்தியாவில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில், மிசோரத்தை தவிர மீதம் உள்ள 4 மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் துவங்கியது. டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது.சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது.

இந்திய நேரம் காலை 11.05 மணி அளவில் உள்ள நிலவரங்கள்:

டெல்லிசட்டமன்றத்தேர்தல்முன்னணிநிலவரம்

டெல்லியின் புது டெல்லி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், கடந்த மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீக்ஷித்தை விட 1000த்திற்கும் அதிகமான ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிட்தக்கது.

மொத்தத் தொகுதிகள் : 70

பாரதிய ஜனதா கட்சி – 32

காங்கிரஸ் – 11

ஆம் ஆத்மி – 22

மற்றவை – 3

மத்தியப்பிரதேச சட்டமன்றத்தேர்தல்முன்னணிநிலவரம்

மொத்தத் தொகுதிகள் : 230

பாரதிய ஜனதா – 120

பகுஜன் சமாஜ் – 3

மற்றவை – 5

ராஜஸ்தான்சட்டமன்றத்தேர்தல்முன்னணி நிலவரம்

மொத்த தொகுதிகள் : 200

பாரதிய ஜனதா – 132

காங்கிரஸ் – 32

பகுஜன் சமாஜ் – 4

மற்றவை– 19

சத்தீஸ்கர் சட்டமன்றத்தேர்தல்முன்னணிநிலவரம்

மொத்தத் தொகுதிகள்: 90

பாரதிய ஜனதா – 43

காங்கிரஸ் – 44

பகுஜன் சமாஜ் – 2

மற்றவை – 11

மிசோரம் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை நாளை டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply