சென்னை கடற்கரை சாலையில் விபத்தில் சிக்கிய தம்பதிக்கு உதவிய மு.க.ஸ்டாலின்

சென்னையில் மின்னல் வேகத்தில் பறக்கும் வாகனங்களுக்கு இடையில் விபத்தில் சிக்குபவர்களுக்கு பெரும்பாலும் யாரும் உதவி செய்ய முன் வருவது இல்லை. சாதாரண மக்களே இப்படி இருக்கும்போது வி.ஐ.பி.க்கள் தங்கள் வேலைகளை பார்க்க எதையும் கண்டு கொள்ளாமல் செல்வார்கள்.ஆனால் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மு.க. ஸ்டாலின் தன் கண்முன்னே விபத்துக்கள் நடப்பதை பார்த்தால் உடனே சாதாரண மனிதரை போல சென்று உதவி செய்வார்.

இன்று காலை சட்ட சபைக்கு செல்வதற்காக மு.க.ஸ்டாலின் காரில் சென்று கொண்டிருந்தார். கடற்கரை சாலை காந்தி சிலை அருகே சென்றபோது எதிரே ஒரு மோட்டார்சைக்கிளில் வந்த கணவன்–மனைவி ஒரு வாகனத்தை முந்த முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு பலத்த அடி விழுந்தது.

இதை கவனித்த மு.க. ஸ்டாலின் உடனே காரை நிறுத்தி தனது உதவியாளர்கள் மூலம் அவர்களை மீட்டு பிளாட்பாரத்தில் உட்கார வைத்தார். அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார். பின்னர் அவர்கள் பற்றிய விவரங்களை கேட்டார். அவர் பெயர் முருகன், மனைவி பெயர் பானுமதி. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர்கள். பானுமதி ராணி மேரி கல்லூரி அருகே உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார். மனைவியை கொண்டு விடுவதற்காக வரும் வழியில்தான் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வரும் வரை மு.க.ஸ்டாலின் 10 நிமிடம் அங்கேயே நின்றார். ஆம்புலன்ஸ் வந்ததும் அவர்களை ஏற்றி அனுப்பி வைத்து விட்டு அவர் காரில் புறப்பட்டு சென்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply