உக்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 30 பேர் பலி

உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள ஒடெஸ்ஸா என்ற இடத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் அங்கு ஆட்சி செய்யும் புதிய அரசு பதவியேற்றவுடன் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கூறுகையில் ரஷ்ய ஆதரவு தீவிரவாத குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 31 பேர் பலியானதாக கூறியுள்ளார். புகை மூட்டத்தில் சிக்கி பெரும்பாலானோர் இறந்துவிட்டதாகவும், வேறு சிலர் ஜன்னல் வழியாக எகிறி குதித்து தப்பிக்க முனைந்ததால் இறந்ததாக கூறினார். சிலாவயன்ஸ்க் நகரில் மட்டும் இன்று ரஷ்ய ஆதரவு தீவிரவாதிகளுக்கும், உக்ரைன் அதரவு படைகளின் தாக்குதலில் 2 ராணுவ வீரர்களும், 9 பொது மக்களும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்நாட்டின் இடைக்கால அதிபரான அலெக்சாண்டர் டர்ச்சினவ் கூறுகையில், ராணுவத்தின் தீவிர ரோந்து பணியின் காரணமாக கிழக்கு சிலாவயன்ஸ்க் நகரில் பல எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply