ஆப்கானிஸ்தான் நிலச்சரிவு: 350 சடலங்கள் மீட்பு

ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று மதியம் ஒரு மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்தன. அவற்றில் வசித்த சுமார் 2000 பேர் மண்ணுக்குள் புதையுண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதையுண்டவர்களை உயிருடன் மீட்க ஐ.நா. பேரிடர் நிவாரணக் குழுவுனரின் மேற்பார்வையில் ஏராளமான மீட்புப் படையினரும், உள்ளூர்வாசிகளும் கடந்த 20 மணி நேரமாக மண்ணைத் தோண்டி சிலரை மட்டும் உயிருடன் மீட்டுள்ளனர்.இதுவரை 350-க்கும் மேற்பட்ட பிரேதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதுமான அளவுக்கு மண்ணை அள்ளும் இயந்திரங்கள் இல்லாததால் சற்று சுணக்க நிலை நீடிப்பதாக உள்ளூர் மக்கள் குறிப்பிட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply