மோடி பிரதமரானால் நாடு பேரழிவை சந்திக்கும்: புத்ததேவ்

நாட்டின் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடு பேரழிவை சந்திக்கும் நிலை ஏற்படும் என மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மா.கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்ஜி கூறியுள்ளார். இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வசிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. ஆனால் நாங்கள் இது பேராபத்தை தரும் என கூறி வருகின்றோம். மோடியை பிரதமராக தேர்ந்தெடுப்பதற்கு மக்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. எனவே மோடியை நம்பாதீர்கள் என்று புத்ததேவ் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தல் துவங்கியவுடன் முதலில் மோடியை பற்றி பேசாத மம்தா, அவருக்கு பூச்செண்டு அனுப்பியுள்ளர். தற்போது வரை மம்தா அதை தவறு என ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள புத்ததேவ்  தேர்தல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள ஹெலிகாப்டரில் செல்லும் மம்தாவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என கேள்வியெழுப்பியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply