திரைப்பட நடிகர் தண்டபாணி திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம்!
தண்டபாணி இன்று தனது 61 ஆவது வயதில் காலமானார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான தண்டபாணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடத்துள்ளார். தமிழில் காதல், சண்டைக்கோழி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், உனக்கும் எனக்கும் உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply