விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஏற்றுக்கொள்ளமுடியாது டேவிட் கேமரூன் புதினுடன் பேச்சு

கிழக்கு உக்ரைன் வான் எல்லை வழியாக நேற்று முன்தினம் 298 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் போயிங் 777 விமானம் ரஷிய ஆதரவுப் படையான கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இவ்விமானத்தில் பயணித்த அனைவருமே உடல் கருகி பலியாகினர். இத்தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்கா ஒரு படி மேலே போய் இத்தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என்று நேரடியாக குற்றஞ்சாட்டியது. அந்நாட்டு அதிபர் ஒபாமா பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார். இந்நிலையில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த கேமரூன், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருப்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார். இதை ரஷ்யா மறுக்க நினைத்தால், பிரிவினைவாதிகள் தாக்குதலில் ஈடுபடவில்லை என்பதற்கான ஆதாரத்தை ரஷ்ய அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதே சமயம் விமானம் விழுந்து நொறுங்கிய பகுதி பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அப்பகுதிக்கு வல்லுனர்கள் சென்று வர வழி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரியுள்ளார். பல்வேறு நாடுகளின் நெருக்கடியால் ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply