பிரதமர் மோடி இன்று பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கு செல்கிறார்
பிரதமர் மோடி இன்று மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கு செல்கிறார். அங்குள்ள விஞ்ஞானிகள் தங்களது பல்வேறு கண்டுபிடிப்புகள் பற்றி பிரதமரிடம் விளக்குவார்கள் என தெரிகிறது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட அழுத்தம் தரப்பட்ட நீர் உலை, பெரிய அளவிலான முடுக்கிகள், நியூட்ரினோ ஆய்வகம் மற்றும் பெரிய அளவிலான அணு மறுசுழற்சி தளங்கள் ஆகியவை பற்றி பிரதமரிடம் விஞ்ஞானிகள் விளக்கி கூற உள்ளதாக அம்மாநில உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பின்னர் அணுசக்தி கழக விஞ்ஞானிகளுடனும், பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளுடனும் பிரதமர் கலந்துரையாட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பின் முதன் முறையாக மும்பை வரும் பிரதமர் மோடி, பாபா அணு ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்ட பின் மாலை டில்லி திரும்புவார் என தெரிகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply