மேற்கு ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்: 37 பேர் பலி
ஈராக்கில் ராணுவ வாகனம் முழுவதும் குண்டுகளை நிரப்பி அடுக்குமாடி கட்டிடத்தின் மீது மோதியதில் 37 பேர் பலியானார்கள். இக்கட்டிடத்தை ராணுவத்தினரும் காவல்துறையினரும் பயன்படுத்தி வந்ததாக இரு போலீஸ் அதிகாரிகளும், மருத்துவ அதிகாரி ஒருவரும் தெரிவித்துள்ளனர். மேற்கு அன்பார் மாகாணத்தில் அடங்கிய ரமாடி என்ற இடத்தில் உள்ள இந்த ஒன்பது மாடி கட்டிடத்தில் கட்டுமான வேலைகள் நடைபெற்று வந்துள்ள நிலையில் அக்கட்டிடத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இத்தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினரும், அப்பாவி பொதுமக்கள் 15 பேரும் பலியானார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் ரமாடி நகரிலும் அதன் சகோதர நகரான பளுஜாவிலும் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply