ஆளுங்கட்சியின் வாக்குபலம் ஊவா மாகாணத்தில் சரிந்துள்ளது
இலங்கையில் நடைபெற்று முடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. எனுனும் ஆளுங்கட்சியின் ஆதரவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கான ஆதரவும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாணசபைக்குரிய 34 ஆசனங்களில் 2 போனஸ் ஆசனங்கள் அடங்கலாக 19 ஆசனங்களை ஆளுங்கட்சி வென்றுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி 51. 25 வீதமான வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 40.24 வீதமான வாக்குகளுடன் 13 ஆசனங்களை வென்றுள்ளது. ஏனைய இரண்டு ஆசனங்களையும் ஜே.வி.பி பெற்றுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply