ஊவா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் திட்டங்கள் தொடரும்
ஊவா மாகாண சபை தேர்தல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் ஊவா மக்களின் எதிர்பார்ப்பு களை நிறைவே ற்றும் செயற்றிட் டங்கள் தொடரும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி யின் தேசிய அமைப் பாளர் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரி வித்தார். இனம், மதம், பிரதேசம் என்ற எந்த வித பேதங்களுமின்றி ஊவா மாகாண சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறு வதற்கு மொனராகலை மற்றும் பதுளை மாவட்ட மக்கள் முழுமை யான ஆதரவளித்துள்ளதாகவும் அவர்களுக்குத் தம் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஊவா மாகாண தேர்தலில் அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள வெற்றி தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ :-
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதானமாகக் கொண்ட அரசாங்கத்துக்கு பல்வேறு வகையிலும் விமர்சனங்கள் மற்றும் சேறுபூசல்கள் இடம்பெற்ற சூழலிலும் அரசாங்கம் இந்தத் தேர்தலை வெற்றிகொண்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கிராமங்கள் தோறும் மக்களுக்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்போது எதிர்க் கட்சி ஒரு நாளைக்கு ஒரு பொய் என பொய்ப் பிரசாரங்களையே முன்னெடுத்து வருகிறது. ஊவா மாகாண சபையில் அரசாங்கத்தை தோல்வியுறச் செய்ய எதிர்க் கட்சி பல்வேறு உபாயங்களை மேற்கொண்டது. ஹரீன் பெர்னாண்டோவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கி தேர்தலை வெற்றிகொள்ளலாம் என பகற் கனவு கண்டது அக்கட்சி.
வரட்சிக் காலநிலை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளும் மக்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றி பெறச் செய்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply