மலையக பெருந்தோட்ட தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஊவாவை வென்றுள்ளோம்

மலையக பெருந்தோட்ட தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஊவா மாகாண சபைத்தேர்தலில் அமோகமான வெற்றியை பெற்றுள்ளோம். எமது வாக்குப் பலத்தில் எவ்விதமான சரிவும் இல்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் எதற்கும் தயாராகவே உள்ளோம் என்று அரசாங்கம் தெரிவித்தது. வெளிநாட்டு அதிகாரத்துடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சி ஊவாவில் மேற்கொண்ட முயற்சியை மக்கள் தகர்த்து விட்டனர் என்று அரசு தெரிவிக்கின்றது.

கொழும்பில் டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊவா மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரசு இவ்வாறு அறிவித்தது.

இங்கு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, பசறை பிரதேச சபை அதிகாரம் ஐ.தே.க. வசமே உள்ளது. அத்தோடு இம்முறை இக்கட்சியின் வருடாந்த மாநாடும் அங்கேயே நடத்தப்பட்டது. இங்கு கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க. அமோகமான வாக்குகளை பெற்றது. ஆனால் இம்முறை ஐ.தே.க. தோல்வி கண்டுள்ளது.

பசறையின் பெருந்தோட்ட மலையக தமிழ் மக்கள் இம்முறை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்குகளை வழங்கியுள்ளனர்.

மலையக தமிழ் மக்களின் வாக்குகளால் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அதேபோன்று வெலிமடையிலும் முஸ்லிம் மக்கள் எமக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

மஹியங்கனை தேர்தல் தொகுதியை தனியொரு யானையின் தொகுதி என வர்ணிப்பார்கள். இன்று அதிலும் ஐ.தே.க. தோல்வி கண்டுள்ளது. அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.

அரசாங்கத்தின் வாக்கு பலத்தில் எவ்விதமான பின்னடைவும் காணப்படவில்லை. எமது ஆட்சியின் பங்காளிக்கட்சிகள் சில தனித்து போட்டியிட்டன. இதனால் வாக்குகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டது. அதனையும் சேர்த்தால் எவ்விதமான பின்னடைவும் எமக்கு ஏற்படவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply