இம்ரான் கான் பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் தொண்டர்களுக்கு மேல் திரண்டதால் கராச்சி நகரம் திணறல்

தேர்தலில் முறைகேடுகளை செய்து ஆட்சியை பிடித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என்று போராடிவரும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் நேற்று கராச்சி நகரில் நடத்திய பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றதால் தொழில்நகரமான கராச்சி திணறிப் போனது. பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஜாவித் மியாண்டட், மோஷின் கான் உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் இம்ரான் கானுடன் மேடை மீது ஏறி நின்று அவரது போராட்டத்துக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தபோது, தொண்டர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

கைக்குழந்தைகளுடன் ஏராளமான பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பல தரப்பு மக்களும் பெருவாரியாக திரண்ட இந்த பொதுக்கூட்டத்தில் இம்ரான் கான் புதிய உற்சாகத்துடன், உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரகாசிக்க வைக்கவும், லஞ்சம், ஊழல், அடக்குமுறை போன்ற அரசின் கொடுங்கோண்மைக்கு எதிராகவும் நாங்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் இறுதி வரை இதேபோல் ஆதரவு வழங்க வேண்டும் என்று இம்ரான் கான் பேசினார்.

இந்ப்த பேரணியில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் கூடியதாக பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆரிப் ஆல்வி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply