ரயில் பாதையோரம் குழுமி நின்று யாழ்தேவியை படம் பிடித்த மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய ஜனாதிபதிக்கு நன்றி
யாழ்ப்பாணம் புகையிரத சேவை மீண்டும் எப்போது ஆரம்பமாகுமெனக் காத்திருந்த வடபகுதி மக்கள் தற்போது பெருமகிழச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் ரயில் சேவையை மீண்டும் ஆரம்பித்து வைத்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு எமது மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அமைச்ச ரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவான ந்தா தெரிவித்துள்ளார். யாழ்தேவி புகையிரத சேவையின் பரீட்சார்த்த சேவை நேற்று நடைபெற்றது.
இச்சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து, ஊடகவியலா ளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் டக்ளஸ் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ரயில் சேவை மூலம் மக்களின் நீண்ட காலத் தேவையை ஜனாதிபதி நிறைவேற்றி வைத்துள்ளார். புகையிரத சேவை எமது மக்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும்.
இதற்காக எமது மக்கள் சுமார் இருபத்தைந்து வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இவ்வருட இறுதிக்குள் யாழ்தேவி சேவை காங்கேசன் துறை வரை சென்று விடும்.
யாழ்தேவி பரீட்சார்த்த ரயில் யாழ்ப் பாணம் நோக்கிச் செல்லும் போது ரயில்பாதையோரத்தில் குழுமி நின்ற பலர் தமது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். மக்கள் ரயில் சேவையை எந்தளவு ஆவலுடன் காத்திருந்தனர் என்பது இதன் மூலம் தெரிகிறது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply