மக்களின் ஆணைக்குத் தலைவணங்கி நம்பிக்கையுடன் பணிகளைத் தொடர்வேன் : செந்தில் தொண்டமான்
இ.தொ.கா.வில் நம்பிக்கை வைத்து ஊவாவில் போட்டியிட்ட எமது வேட்பாளர்களை வெற் றியீட்டச் செய்ததுடன் தமிழ் வேட்பாளர்களுள் தனக்கு ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளை வழங்கிய மக்களுக்கு இதயபூர்வ மான நன்றிக்கடன் செலுத்துவதாக இ. தொ. கா. உபதலைவரும் முன்னாள் ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தில் நான் அடைந்த வெற்றி குறித்து கொழும்பு மருத்துவ மனையின் விசேட பிரிவிலிருந்தவாறு செந்தில் தொண்டமான் மக்களுக்கு நன்றி பாராட்டுக்களை தெரிவித்து விசேட அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது. ஊவா மாகாண சபையில் போட்டியிட்ட சகல தமிழ் வேட்பாளர்களுக்குள்ளும் எனக்கு அதிகூடுதலான விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன.
இது மக்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிக் காட்டுகிறது. இதற்காக எனது மக்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு புதிய மாகாண சபையில் கிடைக்கவுள்ள பதவி மூலம் என்னால் இயன்றவரை சேவைகளை முன் னெடுக்கவுள்ளேன் எங்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட வாகன விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள எனதும் ஏனைய வர்களதும் சுக நலன்களை விசாரிப்போர் நாங்கள் குணமடைய ஆலயங்களில் வேண்டுதல்களில் ஈடுபட்டுள்ளோரையும் மனமாரப் பாராட்டி நன்றி தெரிவிக் கின்றேன்.
அத்துடன் விபத்தை ஏற்படுத்தி யோருக்கு எதிராக குரல் கொடுத்த அனைவருக்கும் மேலும் அச்சம்ப வத்தை எதிர்த்து பெருந்தோட்டங்களில் மறியல் போராட்டங்கள் உள்ளிட்டு வேலை நிறுத்தங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply