இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

தமிழக ஆந்திர கடல் பகுதியான இசாகபள்ளி பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த 7 இலங்கை மீனவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 இலங்கை மீனவர்களையும் நேற்று மாலை சென்னை துறைமுக போலீசாரிடம் கடலோர காவல் படையினர் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்ட 7 பேரும் இலங்கையை சேர்ந்த சுனில் சாரதா (வயது 40), சமீர் (36), ரூபன் (31), குமார் (40), லூமிர் (18), சரங்கா (28), திலகரத்தன் (40) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் 7 பேரையும் எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply