ஜனாதிபதித் தேர்தல் பற்றிய உயர்நீதிமன்றத்தின் கருத்து நாளை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் கருத்து நாளை  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிவிக்கப்படவுள்ளது. மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட தடையிருக்கின்றதா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த புதன்கிழமை உயர் நீதிமன்றிடம் ஆலோசனை கோரியுள்ளார். அதன்படி உயர்நீதிமன்ற பதிவாளர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இது குறித்து விளக்கக் கடிதம் அனுப்புமாறு கோரிக்கை விடுத்தார்.

இதற்கமைய சுமார் 40க்கும் மேற்பட்ட விளக்கக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றை ஆராய்ந்து பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட நீதியரசர்கள் நாளை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தவுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply