பாகிஸ்தானில் தாக்குதல்: தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஒபாமா அவசர ஆலோசனை
பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பெஷாவர் நகரில் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தி உலகை உலுக்கி உள்ள நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமா, நேற்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டி, அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் துணை ஜனாதிபதி ஜோ பிடென், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ், சி.ஐ.ஏ., எப்.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு உளவு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அமெரிக்காவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை காலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் குறித்த அச்சுறுத்தல்கள் பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், உள்நாட்டில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்தும் ஒபாமா, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply