மலையகத்தில் பாரிய அபிவிருத்தி புரட்சிகள் மஹிந்தவை மீண்டும் ஆதரிக்க இ.தொ.கா. முடிவு
மலையகத்தில் இடம்பெறும் அபிவிருத்தி புரட்சிகளை மேலும் முன்னெடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆதரிப்பதென இ. தொ. கா. தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிக்கும் முகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மக்கள் சந்திப்பொன்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை தொழிற் பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு கலந்துகொண்டு உரை யாற்றிய அமைச்சர். கடந்த 10 ஆண்டுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தப் பட்டன. குறிப்பாக வீடமைப்பு மற்றும் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் திவிநெகும, கமநெகும வேலைத்திட்டத்தின் ஊடாக தோட்டப்புற பாதைகள் கொங்கிஅட் பாதைகளாகவும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சர்வ மத வழிபாட்டுத் தலங்களின் நிர்மாண பணிகளுக்காக நிதியொதுக் கப்பட்டும் உள்ளது.
பெருந்தோட்டப்புற படித்த இளைஞர், யுவதிகளுக்கு சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக தொண்டமான் ஞாபகார்த்த மன்ற பிரஜாசக்தி நவசக்தி செயற்றிட்டத்தினூடாக நுவரெலியா மாவட்டத்தில் 3100 பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகள், ஆடுகள், மாடுகள், பன்றிகள் மாட்டுத் தொழுவம் அமைப்பதற்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், அண்மையில் இயற்கையின் சீற்றத்தினால் அப்புதலை மீரியபெத்த மண் சரிவினால் பாதிக்கப்பட்டோருக்கு 75 குடியிருப்புகள் இன்று (18) பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது. அதேவேளை நாளை 19.12.2014 அன்று டயகம 2 ஆம் பிரிவிலே தீயினால் முற்றாக எரிந்த லயன் குடியிருப்புகளுக்கும் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
இவ் வீடுகளை நிர்மாணிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு (ஊ. D. ஆ) நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இராணுவத்தினர் இணைந்து வேலைத் திட்டத்தினை முன்னெடுக்க வுள்ளனர். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் மலையகத்தில் உயர்தரம் வரை கல்விகற்ற இளைஞர் யுவதிகளுக்கு 3129 ஆசிரியர் நியமனங்கள், 500 தபால் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்கள். கிராமசேவகர்கள் மற்றும் பொலிஸ் நியமனங்கள் வழங்கப்பட்டன. அதேபோல் எதிர்வரும் காலங்களில் இன்னும் 3000 பேருக்கு ஆசிரிய உதவியாளர் நியமனங்கள் வழங்கப்பட வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், தோட்ட தொழிலாளர்களுக்கு 50,000 வீட்டுத் திட்டம் இந்திய அரசாங்கத்தினால் 4000 வீடுகள் போன்ற பாரிய வீடமைப்புத் திட்டங்கள், பாதை அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற பாதை அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் இவ் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply