ஒபாமா வருகையால் குதிரைக்கு புல் கிடைக்காமல் அவதிப்பட்ட போலீசார்
குடியரசு தினவிழாவில் பங்கேற்க டெல்லி வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலையும் பார்வையிடுவார் என்று முதலில் அறிவிக்க ப்பட்டிருந்தது. இதன் காரணமாக உத்தரப் பிரசேத மலைப்பகுதி அம்பேத்கார் அகாடாமியில் உள்ள 75–க்கும் அதிகமான குதிரைப்படை குதிரைகளுக்கு புல் கட்டுகளை ஜனாதிபதி பாதுகாப்புபடை போலீசாரின் கடுமையான கட்டுப்பாடு காரணமாக கொண்டு வர முடியவில்லை.‘‘வழக்கமாக இந்த குதிரைகளுக்கான புல் ஆக்ரா விமானப்படை மைதானத்தில் இருந்து கொண்டு வரப்படும். ஆனால், ஒபாமா வருகையையொட்டி அங்கு புல் அறுக்க அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
எனவே, சண்டிகார் மற்றும் குவாலியரின் இருந்து அதே ரக புல்கட்டுகள் குதிரைக்களுக்காக வரவழைக்கப்பட்டன. இதனால் பணம் கொடுத்தாலும், புல்கட்டுகளை கொண்டு வந்து குதிரைகளுக்கு கொடுக்க நீண்ட நேரம் ஆனது. இங்கு பல்வேறு இன குதிரைகள் உள்ளன. அவற்றுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு கொடுக்க வேண்டும், ஆனால் பாதுகாப்பு படை கட்டுப்பாடு காரணமாக மிகுந்த சிரமம் ஏற்பட்டது’’ என்று போலீஸ் அகாடமி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply