ஜப்பான் பிணைக் கைதியை காப்பாற்ற பெண் தீவிரவாதியை விடுவிக்க ஜோர்டான் சம்மதம்

சிரியாவில் தங்கியிருந்த ஜப்பானியர்கள் ஹருணா யுகாவா, கெஞ்சி கோடோ ஆகியோரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்தனர். அவர்கள் கேட்ட பிணைத் தொகையை ஜப்பான் அரசு வழங்காததால் ஹருணா யுகாவை தலை துண்டித்து கொலை செய்தனர். ஜோர்டானை சேர்ந்த விமானி மாஷ்–அல்–கசாபே யையும் பிடித்து பிணைக் கைதியாக வைத்துள்ளனர். இந்த நிலையில் ஐப்பானின் மற்றொரு பிணைக் கைதி கெஞ்சிகோடோ மற்றும் விமானி கசாபே ஆகியோரை விடுவிக்க ஜோர்டான் சிறையில் மரண தண்டனை கைதியாக இருக்கும் ஐ.எஸ். பெண் தீவிரவாதி சஜிதா அல்– ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும். அதுவும் 24 மணி நேரத்திற்குள் இது நடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அதை தொடர்ந்து பெண் தீவிரவாதி சஜிதாவை விடுவிக்கும்படி ஜோர்டானிடம் ஜப்பானின் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தங்களது மகன்களை உயிருடன் விடும்படி பிணைக் கைதிகளின் தாய்மார்கள் தீவிரவாதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஜோர்டான் சிறையில் மரண தண்டனை கைதியாக இருக்கும் பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய ஜோர்டான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஜோர்டான் விமானி மாஷ்அல்– கசாபேயை துன்புறுத்தாமல் விடுதலை செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. இத்தகவலை டெலிவிஷனில் அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply