தகவல்களை முடக்குவதா?: டுவிட்டர் நிறுவனர் – ஊழியருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல்
தகவல்கள் முடக்கப்படுவதால் டுவிட்டர் நிறுவனர் மற்றும் ஊழியர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தில் உலக நாடுகளில் இருந்து பல இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சேர்ந்து வருகிறார்கள். தங்கள் இயக்கத்தில் அவர்களை இணைக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.அதில் அவர்கள் தங்கள் கருத்துக்களை பரப்பி இளைஞர்களை ஈர்த்து வருகின்றனர். அதன் முலம் நாள் ஒன்றுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் குறித்த 90 ஆயிரம் தகவல்கள் பதிவாகி வருகின்றன.
அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதை தொடர்ந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் தகவல் பரிமாற்றம் செய்ய இயலவில்லை.
அதை தொடர்ந்து டுவிட்டர் இணைய தள நிறுவனர் ஜேக் டோர்சிக்கும், அதன் ஊழியர்களுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எங்கள் மீது இது போன்று மறைமுக போரை தொடுத்துள்ளீர்கள். ஆனால் நாங்கள் உங்கள் மீது உண்மையான போரை தொடுக்க வேண்டியது வரும்.
டோர்சியும் அவரது ஊழியர்களும் எங்களது வீரர்கள் (தீவிரவாதிகள்) மற்றும் ஆதரவாளர்கள் மீதும் மறைமுகமாக குறி வைத்துள்ளீர்கள். உங்களின் இந்த போர் தோல்வி அடையும். டுவிட்டரில் எங்கள் கணக்குகளை முடக்கினாலும் நாங்கள் மீண்டும் வருவோம்.
எங்கள் சிங்கங்கள் வெளியே வந்து உங்கள் மூச்சை (உயிரை) நிறுத்தும். அதன் பின்னர் நீங்கள் ஒரு போதும் உயிர் வாழ முடியாது என தெரிவித்துள்ளனர். அரபு மொழியில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply