நைஜீரிய அதிபர் தேர்தல் முகமது புகாரி வெற்றி

நைஜீரிய அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான, முன்னாள் சர்வாதிகாரி முகமது புகாரி, 72, வெற்றி பெற்றார். இவர், தற்போதைய அதிபர் குட்லக் ஜோனாத்தானை விட, 25 லட்சம் கூடுதல் ஓட்டுகளை பெற்றார். முன்னாள் சர்வாதிகாரியான இவர், கடந்த, 1980களில் நைஜீரியாவை ஆட்சி செய்தவர். தற்போது, நான்காவது முறையாக, வரும் மே 29ம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். நைஜீரியா, 1960ம் ஆண்டு, இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது. அதன்பின்னர், பல்வேறு ராணுவப் புரட்சிகளையும், ஆட்சி கவிழ்ப்புகளையும் சந்தித்தது.

1999ம் ஆண்டு, நைஜீரியாவில், சர்வாதிகார ஆட்சி முடிவிற்கு வந்தது. 2011ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குட்லக் ஜோனாத்தான் வெற்றி பெற்றார். தற்போது நடைபெற்ற தேர்தலில், இரண்டாவது முறையாக அதிபராகும் அவரது கனவு தகர்ந்தது. இதற்கு போகோ ஹாரம் பயங்கரவாத அமைப்பின் அட்டூழியங்களை, அவர் கட்டுப்படுத்த தவறியது தான் காரணம். மேலும், நைஜீரிய வரலாற்றில், ஆளுங்கட்சியை சேர்ந்த அதிபர், தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது, இதுவே முதன் முறையாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply