தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது : துனிசியா அரசு

துனிசியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்காது என்று உறுதி அளிக்க முடியாது என்று அரசு அறிவித்துள்ளது. துனிசியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பார்டோ அருங்காட்சியகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 21 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். துனிசிய இளைஞர்கள் அண்டை நாடான லிபியாவில் தீவிரவாத பயிற்சி பெற்று உள்நாட்டில் தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த துனிசிய அதிபர் BEJI CAID ESSEBSI, தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து எதையும் உறுதியாகக் கூற முடியாது என்று தெரிவித்தார். தீவிரவாத பயிற்சி பெறும் இளைஞர்கள், மீண்டும் துனிசியாவில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply