டெக்சாஸ் துப்பாக்கி சூட்டிற்குப் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது
டெக்சாஸ் துப்பாக்கி சூட்டிற்குப் ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளது. இது போன்று அமெரிக்காவில் மேலும் பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் கார்லாண்ட் நகரில் முகம்மது நபியின் உருவத்தைக் கேலிச்சித்திரமாக வரையும் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கார்ட்டூனிஸ்ட்டுகள் பங்கேற்றனர். நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வந்த இரண்டு பேர் அங்கு பாதுகாப்புக்கு நின்ற அலுவலர்கள் மீது திடீர் துப்பாக்கி சூடு நடத்தினர். ஆனால், பாதுகாப்பு அலுவலர்கள் திருப்பிச் சுட்டதில் இரண்டு பேரும் உயிரிழந்தனர். பாதுகாப்பு அலுவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
இதற்கிடையே, இரண்டு பேரை டெக்சாஸ் பாதுகாப்பு அலுவலர்கள் சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தானில் போராட்டம் நடத்தப்பட்டது. உயிரிழந்த இருவருக்கும் அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இருப்பினும் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஐஎஸ் இயக்கம் அறிவித்துள்ளது குறித்துக் கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னெஸ்ட், கொல்லப்பட்ட இரண்டு பேர் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளார்களா என்பது பற்றித் தற்போதைய சூழ்நிலையில் எதுவும் தெரிவிக்க முடியாது என்றார்
தற்கிடையே, ஐஎஸ் அமைப்பின் அறிவிப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்கப் புலனாய்வு அலுவலர்கள் சிலர், இத்தாக்குதலில் எந்தத் தீவிரவாத இயக்கமும் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply